நெடிலடி நான்கான் ஒத்துவரும் பாவின வகை. அடிதோறும் முதற்சீர்நான்கும் வெண்டளை பிறழாமல் கடைச்சீர் ஒன்றும் விளங்காயாக நிகழும்;நேரசையில் தொடங்கும் அடிக்கு எழுத்துப் பதினாறு; நிரையசையில்தொடங்குவதற்குப் பதினேழு. நான்கடியும் ஒரு விகற்பமாகவே வரப்பெறும்.இப்பாவினம் ஏகாரஅசையில் இறுதல் சிறப்பு.எ-டு : குமர சேனாசிரியர் கோவை, தமிழ் முத்தரையர் கோவை,யாப்பருங்கலக் காரிகை.அடிதோறும் எழுத்து எண்ணுகின்றுழி ஆய்தமும் ஒற்றும் ஒழித்து,உயிரும் உயிர்மெய்யும் குற்றியலிகரமும் குற்றியலுகர மும் கொண்டுஎண்ணப்படும். சீரும் தளையும் சிதைய வருமிடத்தே குற்றியலிகரமும்குற்றியலுகரமும் எண்ணப் பறடா.இப்பாவினத்தில் அடிதோறும் முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெற்றுவருதல் சிறப்பு.வீரசோழியம் இவ்யாப்பினைத் ‘திலதம்’ என்னும். [ சைவத் திருமுறையும் திவ்விய பிரபந்தமும் ‘விருத்தம்’ என்னும்.நாலாம் திருமுறையுள் பதிகம் 80 முதல் 113 முடியக் காண்க. ‘நம்மாழ்வார்திருவிருத்தம்’ காண்க. ] (வீ. சோ. 128; யா. கா. பாயிரம் உரை.)