கட்டளைக் கலித்துறை, கலிநிலைத்துறை

இவ்விரண்டிலும் முதற்சீரும் இறுதிச்சீரும் அடிதோறும் மோனைத் தொடைபெற்று வருதல் பொருந்தும் என்ப. இரண்டும் அடிதோறும் ஐஞ்சீர் பெற்ற ஒரேவிகற்பமுடைய நான்கடிப்பாடல். கட்டளைக் கலித்துறை எழுத்தெண்ணிப்பாடப்படுவது. (அறுவகை. யாப்பு 34, 36.)