நாற்சீரடிகள் யாவும் எழுத்தெண்ணற்குரியவையே என்ப தனை மறந்தபேராசிரியரும் நச்சினார்க்கினியரும், வட மொழியை நோக்கிக் கட்டளைஎன்பதோர் இலக்கணம் கற்பித்துக் கூறுப.வடமொழியுள் ஓரடிக்கண் ஒன்று முதல் இருபத்தாறு எழுத்து வரை கொண்டுநான்கடிகளையும் ஒரே அளவை யாக அமைத்துக் கூறுதல் விருத்தம் என்னும்யாப்பு வகை யாம். சந்தம் தண்டகம் முதலிய யாப்புக்களிலும் எழுத் தெண்ணிஅமைத்தலும் உண்டு. தொல்காப்பியம் எந்த வொரு பாவினையும் நான்கடியாகவரையறை செய்ய வில்லை. கொச்சகக் கலிவகையுள் நான்கடி பெற்று வருவன வும்உள. ஆண்டு இசைநயமும் வண்ணமும் கருதிப் புலவோர் ஓர் அளவையாகச்செய்தலும் உண்டெனினும் அவ்வாறே செய்தல் வேண்டும் என்னும் யாப்புறவுஇல்லை. கட்டளை என்பது இசைத்தமிழுக்குரியதன்றி இயற்றமிழுக்கு உரியதன்று.இருசீர் முச்சீர்களானும் ஐஞ்சீர் முதலாகப் பலசீர்களானும்அமைவனவற்றை இடைக்காலத்தார் அடியெனக் கூறி இலக்கணம் செய்தமை கருதி,நாற்சீரடிகளைக் கட்டளையடி எனப் பிறழ உணர்ந்தனர் உரையாசிரியன்மார்;தொல்காப் பியம் யாண்டும் கூறாத சீர்வகையடி கட்டளையடி என்னும்பெயர்களைத் தாமே இட்டு உரைவிளக்கம் செய்தனர். அது ‘தன்னான் ஒருபொருள்கருதிக் கூறல்’ என்னும் குற்றமாம். (தொ. செய். 44 ச. பால)