அடிதோறும் கடைச்சீர்க்கண் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது கடைமோனை(ஈண்டு அளவடியே கொள்க; பிற தொடை விகற்பத்திற்கும் அவ்வாறே கொள்க.)எ-டு : ‘வளரிளங் கொங்கை வான்கெழு ம ருப்பேபொறிவண் டோதியிற் பாடுமா ம ருளே’அடிதோறும் கடைச்சீர்கண் (முதலெழுத்து அளவொத்து நிற்பஇரண்டாமெழுத்து ஒன்றி வருதலாகிய) எதுகை ஒன்றிவரத் தொடுப்பதுகடைஎதுகை.எ-டு : ‘சுரிதரு மென்குழல் மாலைகள் சூ ட்டினீர்புரிமணி மேகலை ஆரமும் பூ ட்டினீர்அடிதோறும் கடைச்சீர்கள் சொல்லானும் பொருளானும் மறுதலைப்படத்தொடுப்பது கடைமுரண்.எ-டு : ‘கயல்மலைப் பன்ன கண்ணிணை கரிதேதடமுலைத் திவளும் தனிவடம் வெளிதே ’அடிதோறும் முதற்சீர்கள் ஈற்றெழுத்து ஒத்துவரத் தொடுப்பதுகடைஇயைபு.எ-டு : ‘ஈத்துவ க்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமைவைத்திழ க்கும் வன்க ணவர்’ (குறள் 228)அடிதொறும் கடைச்சீர்கள் அளபெடுத்து வரத் தொடுப்பது கடை அளபெடை.எ-டு : ‘தொடுகடல் துறைதுறை திரிதரும் சுறாஅகருங்கழி கலந்து கலிதரும் கராஅ ’ (யா. க. 39)