தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. சம்பந்தர் பாடல் பெற்ற கடைமுடி குறித்து இரண்டு வழக்குகள் அமைகின்றன. சோழ நாட்டில் அமையும் கீழூர், கீழையூர் என்பதே இது என்பர் ஒரு சாரார். ஆயின் மு. இராகவையங்கார் முடி கீழூர் இல்லை என மறுக்கின்றார். தஞ்சாவூரிலேயே இருக்கிறது என்று இவரும் குறிப்பிட்டாலும் கோவிலடி என வழங்கும் பேரூருக்குப் பக்கத்தில் கிழக்கே 11/2 மைலில் உள்ள சென்னப் பூண்டியே என்கிறார் இவர். இந்நிலையில் பெயர் பற்றிய விளக்கம் தெளிவாகவில்லை. சம்பந்தர்,
திரை பொரு நுரை பொரு தெண் சுனைநீர்
கரை பொரு வளநகர் கடைமுடியே
என இதன் சிறப்பினைப் பாடுகின்றார். (111-2)