கடைக்கூழை ஐந்து தொடையும் ஆமாறு

ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் முதலெழுத்துஒன்றிவரத் தொடுப்பது கடைக்கூழை மோனை.எ-டு : ‘தன்னடிச் சி லம்பு சி லம்பொடு சி லம்ப’ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் எதுகை ஒன்றிவரத்தொடுப்பது கடைக்கூழை எதுகை.எ-டு : ‘வான்கதிர் வ ட மலி த ட முலை ம ட வரல்’ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் மறுதலைப் படத்தொடுப்பது கடைக் கூழை முரண்.எ-டு : ‘காவியங் க ருங் கண் செவ் வாய்ப் பைந் தொடி’ஓர் அளவடிக்கண் முதலாம் இரண்டாம் மூன்றாம் சீர்கள் இறுதி ஒத்துவரத்தொடுப்பது கடைக்கூழை இயைபு.எ-டு. : ‘குயி லும் பா லும் ஆம்ப லும் மொழியே’ஓர் அளவடிக்கண் இரண்டு மூன்று நான்காம் சீர்கள் அளபெடுத்துவரத்தொடுப்பது கடைக்கூழை அளபெடை.எ-டு : ‘விரிமலர் ம ராஅ ம் க ராஅ ம் வி ராஅ ம்’ (யா. க. 39.)