கடைக்குறை

செய்யுட்கண் சீரமைப்பு முதலியன கருதி ஒரு பகாப்பதம் தனது ஈறுநீங்கப் பயன்படுத்தப்பட்டவழியும், தன் பொருளைத் தவறாதுவெளிப்படுப்பது.எ-டு : ‘நீலுண் துகிலிகை கடுப்ப’நீலம் எனற்பாலது ‘நீல்’ எனக் கடைக் குறைந்தவாறு. (யா. வி. பக்.395)