ஒரு பகாப்பதம் ஈற்றில் குறைந்துநின்று குறையாத சொல்லின் பொருள் தந்து செய்யுளில் பயன்படுவது கடைக்குறை என்னும் விகாரமாம். எ-டு : ‘நீலுண் துகிலிகை கடுப்ப’ (நீலம் என்பதன் கடைக் குறை ‘நீல்’ என்பது) (நன். 156)