ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர் முதலெழுத்து ஒன்றிவரத்தொடுப்பது கடையிணை மோனை.எ-டு : ‘பூந்தார்ச் சிறுகிளி பு லம்பொடு பு லம்ப’ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர்களில் (முத லெழுத்துஅளவொத்து நிற்ப இரண்டாமெழுத்து ஒன்றி வருதலாகிய) எதுகை வரத் தொடுப்பதுகடையிணை எதுகை.எ-டு : “வஞ்சியங் கொடியின் வணங்கிய நுணங்கிடை”ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம்சீர்கள் சொல்லானும் பொருளானும்மறுதலைப்படத் தொடுப்பது கடையிணை முரண்.எ-டு : ‘மீன் தேர்ந்து வருந்திய கருங்கால் வெண்குருகு’ஓர் அளவடிக்கண் முதலாம் இரண்டாம் சீர்கள் இறுதி ஒத்து வரத்தொடுப்பது கடையிணை இயைபு.எ-டு : ‘புய லும் போ லும் பூங்குழற் பிழம்பே’ஓர் அளவடிக்கண் மூன்றாம் நான்காம் சீர்கள் அளபெடுத்துவரத்தொடுப்பது கடையிணை அளபெடை.எ-டு : ‘மெல்லிணர் நறும்பூ வி டாஅ ள் தொ டாஅ ள்’ (யா. க. 39)