கடிய நன்னியம்

இது கடிய நன்னியார் என்பவரால் இயற்றப்பட்ட யாப்பு நூல். கைக்கிளைமருட்பாப் பற்றி இவர் இயற்றிய இரண்டு நூற்பாவும், கைக்கிளைஆசிரியப்பாப் பற்றி இவர் இயற்றிய ஒரு நூற்பாவும் ஆகிய மூன்றே இதுபோதுகிட்டியுள்ளன. கைக்கிளைப் பொருள்மேல் ஆசிரியப்பா நிகழுமிடத்தேஈற்றயலடி முச்சீரான் வரப்பெறாது நாற்சீராக வரப்பெறும் என்பது ஒருநூற்பாக் கருத்து. (யா. வி. பக். 270, 215, 270)