கடியலூர்‌

உருத்திரங்கண்ணனார்‌ என்ற சங்க காலப்‌ புலவர்‌ இவ்‌ வூரினர்‌. ஆகவே கடியலூர்‌ உருத்திரங்கண்ணனார்‌ எனப்‌ பெற்றார்‌. கடியலூர்‌ பாண்டி நாட்டிலுள்ள ஓர்‌ ஊர்‌. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ளது. குறுந்தொகையில்‌ 352 ஆம்‌ பாடலும்‌, அகநானூரற்றில்‌ 167 ஆம்‌ பாடலும்‌ கடியலூர்‌ உருத்திரங்கண்ணனார்‌ பாடியவை,