கடித்தானம்

மலையாள நம்மாழ்வாரால் பாடப்பட்ட தலம். இன்று நாட்டைச் சார்ந்து அமைகிறது. செங்கணாச் சேரியிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. பதினொரு பாசுரங்களில் திருமாலைப் பரவுகின்றார் ஆழ்வார். செல்வர்கள் வாழும் திருக் கடித்தானம் (2909) பூத்த பொழில் தண் திருக்கடித்தானம் (2914 என இவர் இவ்வூரின் சிறப்பு காட்டுகின்றார். மணத்தையுடைய இடம் எனப் பொருட்படும் இவ்வூர்ப் பெயர் என்கின்ற கருத்து ஏற்புடையது.