கடாநிலை

கொற்றவைக்குப் பலியாக மறவர்கள் வீழ்த்தும் கடாவினது நிலையையுரைக்கும் பிரபந்தம்.வடதிசையில் கோவில் கொண்ட கன்னியாகிய கொற்றவைக்கு மன்னர் வீழ்த்தும்கடாவினது நிலையை யுரைக்கும் பிரபந்தம்.வெற்றிபெற வேண்டியோ, வெற்றி பெற்றமைக்குக் கொடை நேர்ந்தோஎருமைக்கடாவை வீழ்த்தும் திறத்தைப் பலபட உரைப்பது. யாப்புவரையாமையால், பெரும்பான்மையும் ஆசிரிய விருத்தத்தால் பாடப்படுவதாகக்கொள்க. (பன். பாட்.326,327)