கண்ணகை பைவ் _ கடம்பு என்று மரவகை நிறைந்த பகுதியாய் இருந்து இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று எண்ணவாய்ப்பு இருக்கிறது. பதிற்றுப்பத்தில் நான்சாம் பத்தின் பதிகத்தில் கடம்பின் பெருவாயில் என்ற ஓர் ஊர்ப் பெயர் குறிக்கப் பெற்றுள்ளது. சேரமன்னன் நார்முடிச்சேரல் என்பவன் இவ்வூரில் நன்னனை வென்று, அவன் கரவல் மரமாகிய வாகையைத் தடிந்து வெற்றி கொண்டான் என்பது செய்தி. கடம்பர்களின் நாட்டின் நகர் கடம்பின் பெருவாயில் போலும். நன்னன் பாழியில் நிறுச்தியிருந்த சேனையுடன் போர் புரிந்தான் என்று யூகிக்க முடிகிறது, பாழி நன்னனின் ஏழில் குன்றத்தைச் சார்ந்தது. அதையடுத்தே கடம்பின் பெருவாயில் என்ற ஊர் இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் தோன்றுகிறது.
“பூழி நாட்டைப் படையெடுக்துக் தழீஇ,
உருள்பூங் கடம்பின் பெருவாயில் நன்னனை
நிலைச் செருவின் ஆற்றலை அறுத்து, அவன்
பொன்படு வாகை முழுமுதல் தடிந்து” (பதிற். நான்காம்பந்து. பதிகம் 6 9,)