கடம்பன் என்னும் சொல் ஒரு பழைய குடியையும், முருடன் என்ற பொருளையும் குறிக்கும் சொல். முரட்டுத் தன்மை வாய்ந்த ஒரு பழைய குடியைச் சார்ந்தவனின் களர் என்.ற பொருளில் இவ்வூரின்பெயர் அமைந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. சாண்டில்யன் என்ற சங்ககாலப் பூலவா் இவ்வூரினர். ஆகவே கடம்பனூர்ச் சாண்டில்யன் எனப் பெயர் பெற்றார். குறுந்தொகை 307 ஆம்பாடல் கடம்பனூர்ச் சாண்டில்யன் பாடியது.