இன்று குழித்தலை என்று வழங்கப்படும் இவ்வூர் திருச்சி மாவட்டத்தில் அமைகிறது. கோயில் கடம்பர் கோயில் என்று வழங்கப்படுகிறது. அப்பர் பாடல் பெற்றுத்தலம் கடப்ப மரங்கள் நிறைந்த நீர்த்துறை என்ற பொருளில் பெயர் கொண்ட தன்மையை இவ்வூர்ப் பெயரே காட்டுகின்றது. தவமரம் கடம்பு என்பதும் இணைத்து நோக்கத்தக்கது. கோயிலின் சிறப்பு காரணமாகக் கடம்பர் கோயில் என்ற வழக்கு அமைந்தது எனத் தோன்றுகிறது. இதனை,.
வண்ணநன் மலரான் பலதேவரும்
கண்ணனும் அறியான் கடம்பந்துறை
நண்ண நம் வினையாயின நாசமே
என்று பாடுகின்றார் அப்பர் ( 132-4 ). குழித்தண்டலையே குழித்தலை என்று குறுகியிருக்கிறது. இன்று மக்கள் வழக்கிலும் இப்பெயரே செல்வாக்குப் பெற்றுத் திகழ்கிறது.