கடந்தை

பெண்ணாகடம் என்றும் பிறிதொரு பெயரைக் கொண்டு திருக்கடந்தை என, இன்று தென்னார்க்காடு மாவட்டத்தில் அமையும் ஊர் இது. அப்பர், சம்பந்தர் பாடியுள்ள தூங்கானை மாடமாகிய, சிவன் கோயிலைக் கொண்ட ஊர்
துன்னார் கடந்தையுட் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே ( 110-1 )
என்றும், இருஞ்சோலை திங்கள் தடவும் கடந்தை’ எனவும் அப்பர் இவ்வூர் பற்றிச் சுட்டுகின்றார். இவர் கடந்தை என்று இவ்வூரைக் குறிப்பிடுகின்றார். எனினும் பிறிதொரு பதிகத்தில், பெண்ணாகடத்துப் பெருந்தூங்கானை மாடத்தார் (265-3 ) எனச் சுட்டும் தன்மை, இரண்டு பெயர்களும் அன்றே இருந்தன என்பதைக் காட்டும் தன்மையில் அமைகிறது. சம்பந்தரும்,
கடந்தைத் தடங்கோயில் சேர். தூங்கானை மாடம் தொழுமின் – களே’ என்று சுட்டும் நிலை அமைகிறது. நம்பியாண்டார் தம் திருத்தொண்டர் திருவந்தாதியில், மனைவி கையைத் தடிந்தவன் பெண்ணாகடத்துக் கலிக் கம்பனே (53) என இந் நாயனாரது வரலாறு தருகின்றார். இந்நிலையில் தூங்கானை மாடம் றைவன் கோயில் குறித் தது என்பது தெளிவு. கடந்தை என்ற பெயர், பெண்ணாகடம் என்ற பெயர் இவை எந்த அடிப்படையில் தோன்றின எனப் பார்க்கும்போது பெண்ணாகடம். தேவகன்னியரும் காமதேனு வும் வெள்ளையானையும் வழிபட்ட தலமாதலின் ( பெண் + ஆ + கடம் ) இப்பெயர் பெற்றது என்பார். எனவே இப்பெயர் பக்தி அடிப்படையில் பிறந்த பெயர் எனக் காண. கடந்தை முதல் பெயராக இருக்க வேண்டும் என்பது தெரிகிறதுஞானசம்பந்தர் இவ்வூர்ச் சிறப்பை,
கிடங்கும் மதிலும் சுலாவியெங்கும்
கெழுமனை கடோறு மறையின் னொலி
தொடங்கும் கடடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் ( 59-1 )
பிறை சூழ் அலங்கலிலங்கு கொன்றை
பிணையும் பெருமான் பிரியாத நீர்
துறை சூழ் கடந்தைத் தடங்கோயில் சேர்
தூங்கானை மாடம் ( 59-7 )
எனப் பல நிலையில் பாடுகின்றார். இந்நிலையில் கடந்தை என்பதை நோக்க, இது மரூஉப் பெயராக இருக்கலாம் எனத் தோன்றுகிறது. நீர்த்துறையில் அமைந்தது என்பதனையும் நோக்க, கடப்பமரங்கள் நிறைந்த துறையாக இருந்தமையால் கடப்பந்துறை கடந்தையாயிற்றோ எனத் தோன்றுகிறது.