ஒருமிறைக்கவி விசேடம்‘நாகநக ராகநிதி நாகரிக ராகநிறைஏகநக ராசி யிணையில்லா – தார்கணிகழ்தென்னரங்க னாளாய சீராள ராஞானநன்னரங்கர்க் கேயடியே னான்’ (மா. அ. பா. 812)இது, பூட்டுவாய்நின்று வலப்பக்கம் இரண்டாம் அறை சென்று கீழ்அறையில்இறங்கி அவ்வழியே மேல் அறையில் ஏறி இறங்கி, வலம்சென்று, இடையிடையேயுள்ளகுண்டுக ளாகிய நான்கு அறைகளிலும் சென்று மேலேறிக் கீழிறங்கி இவ்வாறாகஇறுதிஅறை சென்று முடியுமாறு காண்க.இஃது ஒருவகைக் கடக(b)பந்தம். பிறிதொருவகை மா.அ.பா. 811இல்சொல்லப்பட்டுள்ளது. முகப்பின் பூட்டுவாய் இரண் டிடங்களில்நடுவறையினின்று கீழிறங்கி அவ்வழியே மேலேறிக் கீழிறங்கி வலமாகச் சென்றுமுடிவதாக இப் (b)பந்த அமைப்பு எழுத்துக்கள் அடையும்; இதன்கண்இடையிடையே குண்டுகள் இல.