கஞ்சாறூர்

மலை செய் மதிற் கஞ்சை மானக் கஞ்சாறன் என்னும் வள்ளல் ( நம்பி – திருத்தொண்டர்-13 )
என்று இவ்வூரைக் கஞ்சை எனக் குறிப்பிடுகின்றார் நம்பியாண்டார் நம்பி. கஞ்சாறூரில் பிறந்தவர் மானக் கஞ்சாறனார். இதனை,
மேலாறு செஞ்சடை மேல் வைத்தவர் தாம் விரும்பியது
நூலாறு நன் குணர்வார் தாம்பாடும் நோன்மையது
கோலாறு தேன் பொழியக் கொழுங்கனியின் சாறு ஒழுகும்
காலாறு வயற் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர்
எனப் பாடுகின்றார் சேக்கிழார் ( 18-1 ). இப்பாடலின் இறுதியடி கள் இப்பெயர்க்குரியதொரு காரணத்தைச் சுட்டும் தன்மை போன்று அமைகின்றன.
வயற் கரும்பின் கமழ் சாறூர் கஞ்சாறூர்’
கமழ் சாறூர் கம்சாறூர் கஞ்சாறூர் எனத் திரிந்து கரும்புவளம் பற்றி இப்பெயர் வந்திருக்கலாம் என்பது இவண் தோற்றம் பெறுகிறது. மேலும் பின்னர் அமையும் பாடல்களும் இவ்வூர்ச் சிறப்பைக் காட்டும் வண்ணமே அமைகின்றன.