கச்சி, காஞ்சி, காஞ்சீபுரம், கஞ்சிபுரம், ஏகம்பம் போன்ற பல பெயர்கள் காஞ்சியைக் குறித்து அமைகின்றன. இன்று செங்கற்பட்டு மாவட்டத்தைச் சார்ந்து அமைவது இவ்வூர். தமிழர் வரலாற்றுக் காலம் தொட்டு, இன்று வரைத் தன் புகழில் மாற்றமின்றித் திகழும் ஊர் இது. சமயக் குரவர்களாலும் அரசியல் வல்லுநராலும் போற்றப்பட்ட ஊர் இன்று தமிழரின் பண்பாட்டு மேன்மை உலகு எங்கும் போற்றப்படும் நிலையில் பட்டு உற்பத்தியில் முன்னிற்கின்ற ஊர் இது. தாண்டை நாட்டின் கண் எனத் திகழும்பதி என்றியம்பும் நிலை இதன் சிறப்பை எடுத்தியம்பும். வஞ்சி மரங்களால் பெயர் பெற்ற வஞ்சி மாநகரம் போன்று காஞ்சி மாங்களால் பெயர் பெற்றது. காஞ்சி காஞ்சனபுரம் என்பதே காஞ்சிபுரம் என மருவிற்று போன்றபிற பல எண்ணங்களும் உண்டு. இதனுள் அமைந்த பல கோயில்கள் மேலும் பல பெயர்களையும் இதற்கு வழங்கியிருக்கக் காண்கின்றோம். ஏகம்பம் ஏகம்பர நாதர் கோயில் பெரிய கோயில் என்று அழைக்கப்படும் கோயில் நிலையில் எழுந்த பெயர் இங்கு தலமரம் மா. தலவிருஷமாகிய மாவடியின் கீழ் எழுந்த பிரான். ஏகம் + ஆம்ரம் — மாமரம் = ஏகாம்ரம் – ஏகாம்ர நாதர் – ஏகாம்பரநாதர் என்றா யிற்று என்று ஏகம்பம் என்ற பெயர்க் காரணம் குறிப்பர்.
காமக்கோட்டம் தேவி காமாஷியின் கோயில் அமைந்த இடம். மக்கள் விரும்பும் நிலையில் அமைந்த பகுதி காரணமாகக் காம கோடி என்ற பெயர் அமைந்தது. காஞ்சி காமாஷி என்பது மிகவும் சிறப்பாகச் சமயக் குரவர்களால் மதிக்கப் பெறும் கோயில் அம்மனாகும்.
கச்சி மேற்றளி மூவர் பாடலும் பெற்ற இத்தலத்தில் திருமேற்றளி உறை யும் சிவபெருமான் அமைகின்றார். திருமேற்றளி மேல் கோயில் என்ற பெயரில், கச்சியில் உள்ள சிறப்புடைய கோயில் என்ற நிலையில் இப்பெயர் அமைந்தது.
கச்சி நெறி காரைக் காடு காரைச் செடிகள் நிறைந்த கச்சி அருகில் உள்ள தலம். சம்பந்தர் பாடல் பெற்றது. காஞ்சி வருவதற்கு இது வாயில் என்ற எண்ணம் கச்சி நெறி காரைக்காடு என்ற பெயரின் பொருளையும் உணர்த்துகிறது. இன்று காரைக்காடு திரிந்து திருக்காலிமேடு என்று வழங்குகிறது .
ஓணகாந்தன் தளி சிவன் கோயில் கொண்டமை காரணமாகப் பெற்ற இன்னொரு பெயர். ஓணன், காந்தன் என்னும் இருவரும் வழிபட் டமை சாரணமாக இப்பெயர் அமைந்தது என்பர். என அமைய
கச்சி அநேகங்காவதம் கச்சியில் உள்ள இன்னொரு சிவத்தலம். இன்று பொதுவாகக் காஞ்சிபுரம் என்று வழங்குவதைவிட கஞ்சிபுரம் மக்கள் வழக்கில் எளிமைப்படுத்தப்பட்டு வழங்குகிறது. காஞ்சியில் சிவன் கோயில் பெற்ற நிலையில் இப்பெயர்கள் ( 1 ) திருக்கச்சி அத்திகிரி ( 2 ) திருவெஃகா ( 3 ) அட்டபு யகரம் ( 4 ) வேளுக்ளை. ( 5 ) திருத்தண்கா ( 6 ) ஊரகம் ( 7) நீரகம் ( 8 ) காரகம் ( 9) கார்வானம் ( 10 ) பரமேச்சுவர விண்ணகரம் ( 11 ) பவளவண்ணம் ( 12) நிலாத் திங்கள் துண்டம் ( 13 ) கள்வனூர் ( 14 ) பாடகம் என்ற 14 தலங்களையும் ஆழ்வார் பாடல்கள் சுட்டுகின்றன. இவை அனைத்தும் இங்குள்ள விஷ்ணு கோயில் அடிப்படையில் எழுந்தவையாகும்.
வெஃகா: பெருமான் நாமம். வேகா சேது வேகவதிக்கு அணை யாய்க் கிடந்தவர் என்பது பொருள். வேகா என்பதே வெஃகா என்றாயிற்று.
அட்டபுயகரம்: எட்டு திருக் கரங்களிலும் எட்டு ஆயுதங்களை ஏந்தியுள்ள மையால் அட்டபுயன் என்பது சுவாமிக்கு நாமம் அவன் எழுந் தருளியுள்ள இடம் அட்டபுய அகரம். அஃது அட்டபுயகரம் என மருவிற்று.
வேளுக்கை வேள் இருக்கை – வேளுக்கை என மருவிற்று வேள்- காமம் அதாவது இச்சை. அதனால் எழுந்தருளியிருக்குமிடம் வேளி ருக்கை ( காமகோட்டம் இதனோடு தொடர்புடையதா என்று சிந்திக்கலாம்)
திருத்தண்கா குளிர்ந்த சோலை.
பாடகம் பாடு – அகம். பெருமை தோற்ற எழுந்தருளியிருக்கும் தலம்.
ஊரகம் சங்க இலக்கியம் சுட்டும் ஏரகம் போன்று ஊரகம் அமைகிறது. ஆயின் பொருள் நிலையில் மாறுபடுகிறது. இங்குத் திருமால் நின்ற கோலத்துடன் காட்சி தருகிறார் என் பதைத் திருமழிசைப்பிரான்,
குன்றிருந்த மாடநீடு பாடகத்துமூரகத்தும்
நின்றிருந்து வெஃகணைக் கிடந்த தென்ன நீர்மையே -814
நின்ற தெந்தை யூரகத்திருந்ததெந்தை பாடகத்து
அன் வெஃகணை கிடந்த தென்னிலாத முன்னெலாம் ( 815 )
மேலும் திருமங்கையாழ்வார், இவ்வூரை
நிறைந்த கச்சி ஊரகத்தாய் ( 2069)
காமரு பூங்கச்சி யூரகத்தாய் (2064 )
மதிள் கச்சி ஊரகமே ( 3775-70 )
எனப்பாடும் போது கச்சியுள் அமைகின்ற திருமால் – கோயில் பெயரே ஊரகம் என வழங்கப்பட்டது என்பது தெளிவு பெறுகிறது. ஆதிசேடனின் வடமொழிப் பெயரான உரகம் ஊரகம் என்று ஆயிற்று என்றும் கூறுவர். காஞ்சிக்குரிய பிற பெயர்களும் இவ்வாறு கோயிற் பெயரால் அமைந்தன என்பதும் இவண் குறிப்பிடத்தக்கது. பெரும்பாணாற்றுப்படை காஞ்சியைத் தாமரைப் பொகுட்டில் காண் வரத் தோன்றி…… விழவு மேம்பட்ட பழவிறல் மூதூர் ( 397, 411) என்று சுட்டும் தன்மை அன்றே இதனை மிகச் சிறப் பான நகரமைப்புக் கலை அடிப்படையில் உருவாக்கிய நிலையைக் காட்டவல்லதாக அமைகிறது.