கச்சி என்ற பெயரையே சங்க இலக்கியங்கள் குறிக்கின்றன. பின்னர்தான் காஞ்சி என்ற பெயரையேக் காண்கின்றோம். கச்சி என்ற பெயர் (சீந்தில் என்பது பொருள்) தாவரப் பெயரே. காஞ்சி என்ற பிற்காலப் பெயரும் தாவரப் பெயர் அடிப்படையில் அமைந்ததே, எனவ கச்சி, காஞ்சி, என்ற இரண்டு பெயருமே தாவரப் பெயர் அடிப்படையில் அமைந்தனவே எனக் கூறுவதில் தவறொன்றுமில்லை, செங்கற்பட்டு மாவட்டத்தின் பழைய நகரம் கச்சி, கச்சி என்ற நகரமும் காஞ்சி என்ற நகரமும் ஒன்று என்றும், இரண்டும் வெவ்வேறான தனித்தனி இரு நகரங்கள் என்றும் இருவேறு வகையான கருத்து உள்ளது. இன்றுள்ள காஞ்சி நகரத்திற்குக் கிழக்கிலுள்ள நிலப் பரப்பிலேயே சங்க காலக் காஞ்சி மாநகர் அமைந்திருந்தது என்றும் கருதுன்றனர். கச்சி மாநகரம் ஏகாம்பரேசுவரர் கோயில், கச்சபேசர் கோயில், உலகளந்த பெருமாள் கோயில் ஆகிய கோயில்களுக்குக் கிழக்கிலும், யதோத்தகாரி கோயிலுள்ள பகுதிக்கும் திருக்காலி மேட்டுக்கும் வடக்கிலும் அமைந்து இருந்திருக்க வேண்டும் என்று கருதுவது பொருத்தமாகும். கச்சி மாநகரம் தாமரை மலர் போன்ற அமைப்புடையதாக இருந்தது. அதனைச் சுற்றிலும் அகழி இருந்தது. அகழியைச் சுற்றிக் காவற்காடு இருந்தது. கச்சியில் சேலைகள் இருந்தன. கச்சிப்பேடு என்பது கச்சியின் புறநகர் என்று பொருள்படும். பெரும்பாணாற்றுப்படை பாடப்பெற்ற சங்க காலத்திலும் இக் கச்சிப்பேடு இருந்தது என்பதைக் கச்சிப்பேட்டு நன்னாகையார், கச்சிப் பேட்டு இளந்தச்சனார், கச்சிப் பேட்டுப் பெருந்தச்சனார் போன்ற வழக்காறு கொண்டு நன்கு அறியலாம். திருவெஃகாக் கோயிலுள்ள இடம் முதற் பராந்தகன் காலத் தில் (கி.பி. 907..953) கச்சிப்பேடு என வழங்கப் பெற்றிருக்கிறது. பேடு என்பது நகரத்தின் வெளிப்பகுதியை (புறநகர்ப் பகுதி)க் குறிப்பதாகும். பேடு என்னும் இச்சொல்லே காலப்போக்கில் பேட்டை என மாறியதுபோலும். சிறிய காஞ்சீபுரத்துக்குக் கிழக்கில் நாசரத்துப் பேட்டை, ஐயன் பேட்டை, நாயக்கன் பேட்டை என்பனவும் பெரிய காஞ்சிபுரத்துக்கு வடக்கிலும் வட மேற்கிலும் பஞ்சுப்பேட்டை, ஒலிமுகமது பேட்டை என்பனவும் ஒப்புநோக்கத்தக்கன. (சென்னையைச் சுற்றி இந்தாதிரிப் பேட்டை, முத்தியாலு பேட்டை, செளகார் பேட்டை முதலிய. பேட்டைகளும் இவை போன்றனவே) இன்றைய காஞ்சிபுரம் பெரிய காஞ்சிபுரம், பிள்ளையார் பாளையம் அட்க்ஸன் (Hodgson) பேட்டை, சிறிய காஞ்சிபுரம் எனப் பலப் பிரிவுகளாகப் பிரிந்துள்ளது. அட்க்ஸ்ன் பேட்டைப் பகுதியிலேதான் திருவெஃகா அமைந்துள்ளது. பெரிய காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரேசுவரர் கோயில், முதலாம் ஆதித்த சோழன். காலத்தில் (கி.பி.850 907) கச்சிப்பேட்டில் அமைந்திருந்தது. பெரிய காஞ்சபுரத்துப் புத்தேரி தெருவில் உள்ள கச்சபேசுவரர் கோயில் கச்சிப்பேட்டை சேர்ந்தது என்று முதலாம் இராசராசன் (இ.பி. 985 1012) காலத்துக் கல்வெட்டு ஓன்று தெரிவிக்கின்றது. அதற்குச் சிறிது வடகிழக்கில் உள்ள உலகளந்த பெருமான் கோயில் (ஊரகம்)எஏன்பதும் கச்சிப்பேட்டைச்சேர்ந்தது என்பதும் உத்தம சோழன் (இ.பி. 969 985) கல்வெட்டில் குறிக்கப்பெற்றுள்ளது. முதற் பராந்தகன் (இ.பி. 907 955) காலத்தில் கயிலாசநாதர் கோயில் கச்சிப்பேட்டு பெரிய திருக்கற்றளி எனப் பெற்றது. முதலாம் இராசராசன் மகனான முதலாம் இராசேந்திரன் (கி,பி. 1012 1044) வெளியிட்ட திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் இக் கச்சிப்பேடு “எயிற்கோட்டத்து எயில் நாட்டு நகரம் கச்சிப்பேடு” என்று குறிக்கப் பெற்றுள்ளது. உத்தம சோழன் காலத்தில் சோழர் அரண்மனை கச்சிப்பேட்டிலேதான் இருந்திருக்கிறது. சிறிய காஞ்சிபுரம் சோழர்காலத்தில் அத்தியூர் என வழங்கப் பெற்றது. அது “எயிற்கோட்டத்து எயில்நாட்டு அத்தியூர் என வழங்கப் பெற்றது. அது அக் காலத்தில் காஞ்சிநகரத்தின் பகுதி யன்று எனவும் தெரிகிறது. மணிமேகலைக் காலத்தில் தொண்டை நாட்டின் தலைநகரமாகக் காஞ்சிநகர் விளங்கியது. தேவலோகந்தான் மண்ணுலகில் வந்து கிடந்ததோ என்று மதிக்கும்படியாக இருந்தது காஞ்சு” என்று மணிமேகலை புகழ்கிறது. காஞ்சி என்பது பொன். காஞ்சி நகர் பொன்னகர் இப்பெயர் காஞ்சியின் அழகையும் வளத்தையும் குறிக்கிறது. காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு சோழமன்னர்கள் ஆண்டு வந்தனர். அந்த நகரத்தில் தவம்புரிவோர், சமயவாதிகள் பலர் “இருந்தனர். இதனால் “தொண்டைநாடு சான்றோர் உடைத்து” என்னும் பெருமை பெற்றது. பதினெட்டு மொழிகளைப் பேசும், பலநாட்டு மக்களும் அந்நகரத்தில் இருந்தனர், அந்நகரின் நடுவில் புத்தர் கோயில் இருந்தது. நகரின் தென் மேற்கில் ஒரு பூஞ்சோலை, குளம், சோலையில் புத்தபீடிகை இவை அமைக்கப்பட்டிருந்தன. இச்செய்திகள் மணிமேகலை நூல் தருவன. காஞ்சி என்ற ஊர்ப்பெயர் மரப்பெயரால் பெயர் பெற்றது பிற்காலத்தில் புரம் என்ற பின் ஒட்டுடன் இணைந்து காஞ்சிபுர மாயிற்று. இன்று மக்கள் பேச்சு வழக்கில் காஞ்சி என்றும் கஞ் புரம் என்றும் வழங்குகின்றனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவனாகிய இரண்டாம் இராசாதிராசனின் கல்வெட்டு ஒன்றில் காஞ்சி என்றே இவ்வூர் குறிக்கப்பெற்றுள்ளது. சங்ககாலத்தில் கச்சி என வழங்கப்பெற்று, காலப் போக்கில் காஞ்சி என்ற பெயர் நிலைத்ததோ என்று எண்ணவும் இடமளிக் கிறது. நற்றிணையில் 123ஆம் பாடல் காஞ்சிப் புலவனார் பாடியது. 144 மற்றும் 213 ஆம்பாடல்கள் கச்சிப் பேட்டுப் பெருஞ்சாத்தனார் பாடியவை. 266 ஆம் பாடல் கச்சிப் பேட்டு இளந்தத்தனார் பாடியது. குறுந்தொகையில் 30, 172, 180, 192, 197, 287 ஆகிய பாடல் கள் கச்சிப்பேட்டு நன்னாகையார் பாடியவை. 213 மற்றும் 216 ஆகிய பாடல்கள் கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன் பாடியவை.
அடங்காத் தானையோடு உடன்று மேல்வந்த
ஒன்னாத் தெவ்வர் உலைவிடத்து ஆர்த்து,
கச்சியோனே, கைவண் தோன்றல்”” (பத்துப். பெரும்பாண். 148 420)
பொன்னெயிற் காஞ்சி நகர்க்கவினழிய” (மணிமேகலை)
கந்திற்பரவை வருவதுரைத்த காதை (418,) க
கச்சி முற்றத்து நின்னுயிர்கடை கொள” (ஷே 174)
“ஆங்கவன் தானு தநின்னறத்திற் கேதுப்
பூங்கொடி கச்சி மாநகராதவின்’? (௸ சச்சமாநகர் புக்க காதை 151 152)
“பொன்னெயிற் காஞ்சி நாடுகவினழிந்து ”* (௸ ௸ 156)