‘கூக்குக்கிக் காக்காகா!கூக்கக்கு கைக்கொக்கோகூக்கொக்கா கைக்காகாகூக்காக்கைக் கேகாகா’கூ – பூமியைகுக்கிக்கு – வயிற்றிற்குஆக்கு ஆகா – இரையாக்கும் திருமேனியுடையவனே!கூ – பூமியைகக்குகைக்கு ஒ – மீளப் புறத்து உமிழ்தற்கு ஒத்தகோ – கோவே!கூ – பூமியில்கொக்கு – குதிரை (-கற்கி) யாகஆகைக்காகா – அவதரிக்கப் போகின்றவனே!கூ – பூமியைகாக்கைக்கு – பாதுகாப்பதற்குஏகா – இந்நிலவுலகத்திற்குப் பரமபதத்தினின்று வந்தவனே!கா – என்னைக் காப்பாயாக.இப்பாடல் முழுதும் ககரமெய்யும் ககரமெய்யோடு உயிர் கூடியஉயிர்மெய்யுமாக அமைதலின், இது ககரமெய் வருக்க மடக்காம். (மா. அ. பா.762.)