மகரஈறான அஃறிணைப் பெயர்களுள் சில னகரத்தோடு உறழ்ந்து வரும்
என்பது ஓர் மயக்கவகை உணர்த்தலாம்.
எ-டு: நிலம் – நிலன்.
மொழி முதலிலும் இடையிலும் நின்ற அகர ஐகாரங்கள் தம்மில்
வேறுபாடின்றிச் சகர ஞகர யகரங்களின் முன் வரின் ஒக்கும் என்பதும் அது.
எ-டு : பசல் – பைசல்; மஞ்சு – மைஞ்சு; மயல் – மையல்; அரசு – அரைசு;
இலஞ்சி – இலைஞ்சி; அரயர் – அரையர்.
ஐகாரம் யகரம் என்ற இவற்றின்வழியே வரும் நகரத்துடன் ஞகரம் உறழும்
என்பாருமுளர்.
எ-டு : ஐந்நூறு – ஐஞ்ஞூறு; மெய்ந் நன்று – மெய்ஞ் ஞன்று (நன்.
121 – 123 மயிலை.)