ஓர் அளபு இசைத்தல்

ஒரு மாத்திரை அளவிற்றாக ஒலித்தல். அ இ உ எ ஒ – என்ற குற்றுயிர்
ஐந்தும், இவை மெய்மீது பொருந்த உண்டாகும் உயிர்மெய்க்
குற்றெழுத்துக்கள் தொண்ணூறும் – ஒவ்வொன் றும் ஒரு மாத்திரை அளவிற்றாக
ஒலிப்பதாம். (தொ.எ. 3, 10 நச்.)
ஐகாரக்குறுக்கம் மொழி இடைகடைகளில் ஒருமாத்திரை அளவிற்கு ஒலிப்பது
முண்டு. குற்றுகரம் புணர்மொழியிடை முற்றியலுகரமாய் ஒருமாத்திரை
அளவிற்றாகும். (57, 409 இள.)
ஒளகாரக் குறுக்கமும் ஒற்றளபெடையும் ஒருமாத்திரை அளவினவாக ஒலிக்கும்
என்பது நன்னூல். (98)