ஓர் அளபு ஆகும் ஐகாரமும் ஒளகாரமும்

மொழி இடையிலும் கடையிலும் அஇ, அய் – என்பன போல ஒலிக்கும் ஐகாரம்
ஒரே மாத்திரை அளவிற்றாதலும் அருகி நிகழ்வது.
சீவக சிந்தாமணியில் (933) ‘இவையின், கவிஞர், சுவையின், அவையின்’ என
அடியெதுகையில் ஐகாரம் இகரம் போல ஒரு மாத்திரை அளவு
ஒலிப்பதைக்குறிப்பதாம். ஆயின், மொழி முதற்கண் ஐகாரம் சுருங்காது.
பிற்காலத்தில், மொழி முதல் ஐகாரம் ‘அய்’ போலவும், ஒளகாரம் ‘அவ்’
போலவும் ஒலித்தலின், வீரசோழியமும் நேமிநாதமும் ஐ – அய் எனவும், ஒள –
அவ் எனவும் ஒலிக்கும் என்றன. அதனால் அந்த ஐ, ஒள – ஒன்றரை மாத்திரை
ஒலிக்கும். அவை அவ்வாறு ஒலித்தல் மொழிமுதற்கண்ணாம்.
‘கௌவை, வெவ்வேல், அவ்வேலே’; ‘கொய்தகை, செய்யசந், கைதரு, பெய்தொளி’
– என்ற அடி முதற்சீர்களை நோக்கி, ஒள- அவ் எனவும், ஐ- அய் எனவும்
ஒலிப்பதைக் காணலாம். (பு. வெ. மா. 4 : 23; சீவக. 1267)
தொல்காப்பியனார்க்கு ஒளகாரக்குறுக்கம் உடன்பாடன்று. (எ. ஆ. பக்.
63, 64)