ஓரைப் பொருத்தம்

அகரமும் இகரமும் உகரமும் எகரமும் ஒகரமும் தத்தம் இனஎழுத்துக்களுடன் சார்த்தி, ஐகாரம் இகரத்தொடும் ஒளகாரம் உகரத்தொடும்சார்த்தி ஐவகை ஆக்கி, ஆதித்தன் உதயம் தொடங்கி நன்பகலின் முடிவுவரை ஓர்ஆறு ஆறாக வகுத்தவற்றுள் முன் நின்ற ஓரை மூன்றில் அகலக் கவியைப்புனைந்து இன்புறுதல் முறை. அகலக்கவியின் முதலெழுத்துஉயிர்மெய்யாயினும் அதன்கண் உயிரே கொள்ளப்படும். ஏனைய இரண்டு ஓரையும்ஆகா என்பது.அ. ஆ – உதயம் தொடங்கி முதல் 6 நாழிகை முடிய; 1-3 நாழிகை ஏற்றன.இ ஈ ஐ 7 முதல் 12 நாழிகை முடிய; 7 – 9 நாழிகை ஏற்றன.உ ஊ ஒள 13 முதல் 18 நாழிகை முடிய; 13 – 15 நாழிகை ஏற்றன.எ ஏ 19 முதல் 24 நாழிகை முடிய; 19-21 நாழிகை ஏற்றன.ஒ ஓ 25 முதல் 30 நாழிகை முடிய; 25- 27 நாழிகை ஏற்றன.ஒவ்வொரு பகுப்பிற்கும் உரிய அவ்வாறு நாழிகைகளில் முதல் மும்மூன்றுநாழிகைகளே ஏற்றனவாம். (இ.வி. பாட். 177)