அடி முதற்கண் ஓரெழுத்து மடங்கி மீண்டு வருதல் அடி முதல் மடக்கு.இவ்வாறு ஒவ்வோர் அடியிலும் முதலெழுத்து மடங்கி மீண்டும் வரின் அஃதுஓரெழுத்து அடிமுதல் முற்றும் மடக்காம்.எ-டு : ‘நாநா நாதம் கூடிசை நாடும் தொழிலோவாதாதா தார மாக வரைத்தண் மலர்மீதேவாவா வார்தண் சோலையில் வாழும் வரிவண்டேயாயா யாளிற் சேர்த்துவ தன்பற் கிசையாயால்’‘நாநா (-பல விதமான) நாதம் கூடும் இசைநாடும் தொழில் ஓவா(மல்)தாது ஆதாரமாக (-மகரந்தம் சேர்க்க) மலர்மீது வாவா (-தாவி) வாழும்வரிவண்டே! யாய் ஆயாள் (-தாயானவள்) இல் சேர்த்துவது (என்னைஇற்செறிப்பதை) அன்பற்கு இசையாய்’ என்று பொருள்படும் இப்பாடற்கண்,நாநா, தாதா, வாவா, யாயா – என அடிதோறும் ஓரெழுத்து அடிமுதல் மடக்காகப்பாட்டு முழுதும் வந்தமை காணப் படும். (தண்டி. 97)