ஈரடி மடக்கு ஆறு :நாலடிப் பாடற்கண், முதலடியும் இரண்டாமடியும், முதலடியும் மூன்றாம்அடியும், முதலடியும் நான்காம் அடியும், இரண்டாம் அடியும்மூன்றாமடியும், இரண்டா மடியும் நான்காம் அடியும், மூன்றாமடியும்நான்காமடியும் மடங்கிவரும் ஈரடி மடக்கு ஆறாம்.மூவடி மடக்கு நான்கு :நான்கடிப் பாடற்கண், ஈற்றடி நீங்கலான ஏனைய மூன்றடிகள் (1, 2, 3),முதல் அயலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (1, 3, 4), ஈற்றயலடி நீங்கலானஏனைய மூவடிகள் (1, 2, 4), முதலடி நீங்கலான ஏனைய மூவடிகள் (2, 3, 4)மடக்கி வரும் மூவடி மடக்கு நான்காகும்.நான்கடி மடக்காகிய முற்றுமடக்கு ஒன்று. ஆகவே, ஓரடி ஒழிந்த ஈரடிமூவடி நான்கடி மடக்குக்கள் ஆறும் நான்கும் ஒன்றுமாகப் பதினொன்றாதல்காண்க. (தண்டி. 95 உரை)