ஓமாம் புலியூர்

ஓமாம் புலியூர் என்றே இன்று வரை வழங்கப்படும் இவ்வூர் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சார்ந்து இன்று அமைகிறது. சம்பந்தர், அப்பர் பாடல் பெற்றது. நட்டம் ஆடும் எம் விகிதர் விருப்பொடும் உறைகின்ற இடம், ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் என்பது இவ்வூர்ச் சிறப்பு தெரிவிக்கும் பாடல். தி.வை.சதாசிவப்பண்டாரத்தார். சோழ மண்டலத்திலிருந்த உள்நாடுகள் எல்லாவற்றையும் கல்வெட்டுகளின் துணை கொண்டு துருவி நோக்குங்கால், மேற்கா நாடு என்ற பெயருடைய நாடு ஒன்று கொள்ளிடத்தின் வடகரையில் முன்னர் இருந்தது என்று தெரிகிறது. கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள பாடல் பெற்ற தலமாகிய ஓமாம் புலியூர் அம்மேற்கா நாட்டில் உள்ள ஒரு திருப்பதி என்பது கல்வெட்டுகளினால் அறியப்படுகிறது என்பார்.