ஓசை கெட்ட நேரிசை வெண்பா

நேரிசை வெண்பா ஓசைகெடில் வெண்டுறையாம்.எ-டு : ‘குலாவணங்கு வில்லெயினர் கோன்கண்டன் கோழிநிலாவணங்கு நீர்மணல்மேல் நின்று – புலாலுணங்கல்கொள்ளும்புட் காக்கின்ற கோவின்மை யோநீபிறர் உள்ளம்புக் காப்ப துரை.’இருவிகற்பத்தான் வந்த இந்நேரிசை வெண்பாவினுள்மூன்றாமடியிறுதிச்சீர் தேமாங்கனி எனக் கனிச்சீராய் வந்தமையால் ஓசைகெட்டு வெண்டுறைப்பாற்பட்டது. (வீ. சோ. 121 உரை)