ஓகார இடைச்சொல் மொழியீற்றில் மாறுகோள் எச்சம், வினா, ஐயம், ஒழியிசை
– என்ற பொருள்கள்மேலும், தெரி நிலை, எண், சிறப்பு, ஈற்றசை – என்ற
பொருள்கள்மேலும் வரும். அது வருமொழி வன்கணம் வரினும் இயல்பாகப்
புணரும்.
எ-டு : யானோ கொண்டேன்.
கோ என்ற பெயர் இல் என்ற வருமொழியொடு புணரும்வழி, ஒகரமாகிய
எழுத்துப்பேறளபெடை பெறாது (வகர) உடம்படுமெய் பெற்று இயல்பாகப்
புணரும்.
வருமாறு : கோ+இல்
> கோ+வ்+இல் =
கோவில்
(தொ. எ. 290, 291,293, நச்.) (மு.வீ. புணர். 24)