ஓகாரஈற்றுப் பொதுப்புணர்ச்சி

ஓகார ஈறு அல்வழிக்கண் வன்கணம் வந்துழி வல்லெழுத்து மிக்குப்
புணரும்.
எ-டு : ஓக் கடிது, சோக் கடிது (தொ. எ.289 நச்.)
ஓகார இடைச்சொல் எப்பொருளில் வரினும், வன்கணம் வரினும் இயல்பாகவே
புணரும்.
எ-டு : யானோ கொண்டேன் (290, 291 நச்.)
ஓகாரஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்
எழுத்துப்பேறளபெடையாகிய ஒகரமும் வல்லெழுத்தும் பெறுதலும்,
உருபுபுணர்ச்சி போல் ஒன்சாரியை பெற்றுப் புணர்தலுமுண்டு.
எ-டு : ஓஒக் கடுமை, கோஒக் கடுமை, சோஒக் கடுமை;
கோஒன்கை, கோஒன்செவி (292, 294 நச்.)