நிலைமொழி ஓகார ஈற்றுச் சொல்லாக, வருமொழி இல் என்ற சொல் வரின், ஓகார
இறுதிக்குரிய ஒன்சாரியை பெறாது உடம்படுமெய் அடுத்து இயல்பாகப்
புணரும்.
வருமாறு: கோ+ இல்= கோவில் (வகரம் உடம்படுமெய்)
(தொ.எ. 293 நச்.)
‘கோமா முன்வரின் யகரமும் குதிக்கும்’ (மு.வீ. புணரியல் 24)
என்பதனால் யகர உடம்படுமெய் பெற்று, கோ + இல் = கோயில் – என்றாதலே
இக்காலத்துப் பெரும்பான்மை ஆயிற்று.