‘ஒவ்வொன்று கொடு’: தழாத் தொடர்

‘ஒவ்வொன்று கொடு’ என்றால், இம்முறையே பலவற்றையும் கொடு எனப்
பொருள்தந்து நிற்றலின், ‘ஒவ்வொன்று’ என்பது அடுக்கன்று; வேற்றுமை
அல்லன எல்லாம் அல்வழி ஆதலின், தழாத்தொடராய் அல்வழியுள் ஒன்றாம்
என்பது. (நன். 199 சங்கர.)