வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும் கலந்துவரும் வெண்பாவின்ஒசை.எ-டு : ‘கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமைசொல்லா நலத்தது சால்பு’ (கு. 984)இதன்கண், பிறர்தீமை என்ற வெண்சீர் சொல்லா என்ற சீருடன்ஒன்றுமிடத்து வெண்சீர் வெண்டளையும், ஏனைய சீர்கள் அடுத்த சீர்களுடன்ஒன்றுமிடத்து இயற்சீர் வெண் டளையும் வந்துள்ளன. ஆதலின் இப்பாடலின் ஓசைஒழுகிசைச் செப்பல். (யா. க. 57 உரை)