ஒழிந்ததன் நிலை

ஒழியிசை ஓகாரத்தின் நிலை. ஓகார இடைச்சொல் சுட்டும் பல பொருள்களில்
ஒழியிசைப் பொருளும் ஒன்று. ஏனைய ஓகாரங்களை அடுத்த நிலைமொழியீறுகள்
வருமொழி வன் கணத்தோடு இயல்பாகப் புணர்வது போலவே, ஒழியிசை ஓகாரமும்
இயல்பாகப் புணரும்.
எ-டு : கொளலோ கொண்டான் . (கொண்டு உய்யக்கொண் டான் அல்லன் என்பது
பொருள்.); செலலோ சென்றான் (சென்று உய்யச் சென்றான் அல்லன்.); தரலோ
தந்தான் (தந்து உய்யத் தந்தான் அல்லன்); போதலோ போந்தான் (போந்து
உய்யப் போந்தான் அல்லன்) – இவை இயல்பாகப் புணர்ந்தன. (தொ. எ. 291 நச்.
உரை)