ஒளகாரக் குறுக்கம் வருமாறு: ஒளவை, பௌவம் – என முதற்கண் ஒளகாரம்
குறுகிற்று. இடையும் ஈறும் வந்தவழிக் கண்டுகொள்க.
‘மும்மை இடத்தும் ஐஒளவும் குறுகும்’ என எங்கும் ஒட்டிக் கொள்க.
(ஐகாரம் மொழி மூவிடத்தும் குறுகுமாறு போல, ஒளகாரமும் மொழி மூவிடத்தும்
வந்து குறுகும் என்பது நேமிநாத ஆசிரியர் கருத்து. ஒளகாரம் மொழி இடைகடை
களில் வாராமையின் அவ்விடங்களில் ஒளகாரக் குறுக்கம் இன்று என்பது
தெளிவு.) (நேமி. எழுத். 4 உரை)
‘ஐகார ஒளகாரக் குறுக்கங்கள்’ காண்க.