ஒளகாரஈறு முன்னிலை ஒருமை ஏவற்கண் வாராது. அஃது அவ்வாறு வருவதாயின் உகரச்சாரியை பெற்றே வரும்; வன்கணம் வரின் உறழ்ந்து முடியும். எ-டு : கௌவு கொற்றா, வெளவு சாத்தா, வெளவு தேவா, வெளவு பூதா; கௌவுக் கொற்றா, வெளவுச் சாத்தா…. (தொ. எ. 152 நச்.)