ஒலிஅந்தாதி (1)

பல சந்தம் கூடிய பதினாறு கலைவகுப்பானாகிய முப்பது எண்ணால்அந்தாதித் தொடையாக அமையும் பிரபந்தமாம்.(இ. வி. பாட். 64)ஓரடிக்குப் பதினாறு அல்லது எட்டுக்கலைகள் தொடுத்த பலசந்தவகுப்புக்கள் அந்தாதியாக 30 செய்யுள் பாடுவது. ‘ஒலியலந்தாதி’ என்பதும்அது. (வெண்பாப். செய். 13)16 கலை ஓரடியாக வைத்து இங்ஙனம் நாலடிக்கு 64 கலைவகுத்துப் பலசந்தமாக வண்ணமும் கலைவைப்பும் தவறாமல் அந்தாதித்து வர 30 செய்யுள்பாடுவது; சிறு பான்மை எட்டுக்கலையானும் வரப்பெறும்; அன்றியும்,வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம்மூன்றையும் பப்பத் தாகஅந்தாதித்துப் பாடுவதும் ஆம். (தொ. வி. 283 உரை)