எ-டு : ‘நுமது புனலி லளியி வரிவையமுத விதழி னிகலு – குமுதமருவி நறவு பருக வளருமுருவ முடைய துரை.’‘அளி! நுமது புனலில் இ(வ்)வரிவை அமுத இதழின் இகலு(ம்) குமுதம்மருவி நறவு பருக வளரும் உருவம் உடையது உரை’ என்று பொருள்செய்யப்படும்.“வண்டே! நீ பழகும் குளங்களில் இப் பெண்ணின் அமுதம் பொதிந்த இதழ்கள்போலத் தோற்றம் அளிக்கும் குமுத மலர்களில் ஒருமுறை மருவித் தேனைநுகர்ந்த பிறகு மீண்டும் தேன் ஊறும் தன்மையுடைய மலர்கள் உளவாயின்கூறு” என்று தலைவன் தலைவியது நலம் பாராட்டிய இப் பாடற்கண்,ஒற்றெழுத்து ஏதுமில்லாது எல்லாம் உயிர் மெய்யெழுத்தாக இருத்தல்காணப்படும். (தண்டி. 97 உரை)