மிறைக் கவிகளுள் ஒற்றை மாற்றுதல் – ஒற்றைப் பிரித்தல். ஒருமொழியும் தொடர்மொழியுமாய்ப் பொருள்படுவனவற்றை வேறு பொருள்பட, ஒற்றைப்பெயர்த்தலால் பாடுவது. இஃது ஓரளவு சிலேடையும் அமையும்.எ-டு : ‘வண்புயலைக் கீழ்ப்படுத்து வானத் தருமலைந்துமண்குளிரச் சாயல் வளர்க்குமாம் – தண்கவிகைக்கொங்கார் அலங்கல் குலதீபன் கொய்பொழில்சூழ்கங்கா புரமாளி கை.’கங்காபுரம் ஆளி கை – கங்காபுரத்தை ஆள்கின்ற சோழனின் கைகள். அவன்தரும் பெருங்கொடை காரணமாக அக்கைகள் கார்மேகத்தைத் தோற்பித்துக்கற்பகமரத்துடன் போட்டி யிட்டுப் பொருது உலகினை அருள்செய்துமகிழ்விக்கும்.கங்காபுரத்து மாளிகைகள் மேகத்தையும் கடந்து வானரைவி தங்கள்உச்சியில் கற்பக மரங்களைத் தங்கச்செய்து தங்கள் பெரும்பரப்பால்உலகிற்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்றன. இவ்வாறு ‘கங்காபுரமாளிகை’என்ற தொடர்மொழி பிரிக்கப் பட் டுள்ளமை ஒற்றுப் பெயர்த்தலாம். (தண்டி.98 உரை.)ஒரு மொழியைப் பாட்டின் இறுதியில் வைத்துப் பிறிது பொருள் பயக்கப்பாடுவது ஒற்றுப் பெயர்த்தல். (யா. வி. பக். 541)ஒற்றுப் பெயர்த்தல் என்பது ஒருமொழியைப் பாடி நிறுத்திவைத்துப் பிறிதொரு பொருள்படப் பாடுவதும், பலபெயர் கூட்ட ஒருபொருள் வரப்பாடுவதும் என இரண்டு வகைப்படும். (வீ. சோ. 181 உரை)இதன் இரண்டாம் வகையை ஏனைய அணிநூல்கள் வினா உத்தரத்துள் அடக்கும்(மா. அ. 280; மு.வீ. சொல்லணி. 15); இது தண்டியலங்காரத்தும்இலக்கணவிளக்க அணியிய லுள்ளும் ஒற்றுப் பெயர்த்தலை அடுத்துக்கூறப்படுவது. ‘வினா உத்தரம்’ காண்க.