ஒற்றுதல் தட்டுதல் எனவும் அழுத்தித் தடவுதல் எனவும் பொருள் பெறும்.
வருடுதல் மெல்லத் தடவுதல் என்று பொருள் பெறும்.
நாநுனி மேல்நோக்கிச் சென்று மேல்வாயை ஒற்றுதலால் ற ன -வும், நாநுனி
மேல்நோக்கிச் சென்று மேல்வாயை வருடுத லால் ர ழ – வும் பிறக்கும்.
எனவே, வருடுதலால் இடைநிகரான ஒலியும், ஒற்றுதலால் அழுத்தமான ஒலியும்
பிறக்கும் என்பது. (ற ன ர ழ: மெய்யெழுத்தைக் குறிப்பன.) (தொ. எ. 94,
95 நச்.)