திருவொற்றியூர் எனும் பெயராக, செங்கற்பட்டு மாவட்டத் தில் உள்ளது இவ்வூர். ” தேவார மூவராலும் பாடல் பெற்ற தலம் இது. கடற்கரை அருகேயுள்ள ஊர் இது என்பதனை,
உருவேற்றார் அமர்ந்துறையும் ஓத வேலை ஒற்றியூர் பெரிய – 34-1030
பாட்டும் பாடிப்பரவித் திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமுந் திமிலும் கரைக்கே
ஒட்டும் திரைவாய் ஒற்றியூரே
போன்ற பாடல்கள் காட்டுகின்றன. மேலும் பெரிய புராணம் இதனை ஒற்றி நகர் என்றும் சுட்டுகின்றது ( 34-1032) ஒற்றியாக நிலத்தை வைத்த பின்னர் மீட்டதன் காரணமாக ஒற்றியூர் என பெயர் வந்திருக்குமோ ? இக்கோயில் தலமரம் மகிழமரம். இதற்கு ஆதிபுரி என்ற பெயரும் உண்டு.