ஒரு புணர்ச்சிக்கண் முத்திரிபும் வருதல்

மகத்தாற் கொண்டான் – மக(ம்)+ அத்து+ ஆன்+ கொண்டான்;
இப்புணர்ச்சிக்கண், அத்தும் ஆனும் மிகுதல்; அத்தின் அகரம் கெடுதல்;
ஆன் சாரியையின் னகர ஒற்று றகர ஒற்றாக மெய் பிறிது ஆதல்.
இவ்வாறு ஒரு புணர்ச்சிக்கண்ணேயே, மெய்பிறிதாதல் – மிகுதல் –
குன்றல் – என்ற முத்திரிபுகளும் வந்தன. (தொ. எ. 109 நச்.)
எ-டு : யhனை + கோடு = யானைக்கோடு – வலி மிகல்; நிலம் + பனை =
நிலப்பனை – மகரம் கெடுதல், பகரம்மிகல்; பனை + காய் = பனங்காய் – ஐ
கெடுதல், ‘அம்’மிகல், அம்மின் மகரம் ஙகரமாகத் திரிதல். இவ்வாறு ஒரு
புணர்ச்சியில் இரண்டு மூன்று விகாரமும் வருதல் காண்க. (நன்.
157)