ஒருவிகற்ப ஓராசிடை நேரிசைவெண்பா

நான்கடிகளும் ஓரடிஎதுகை பெற, இரண்டாம் அடியின்3 ஆம் சீர் குறள்வெண்பாவின் ஈற்றசைச்சீர் போல இராது நாலாம்சீருடன் இணைக்கப்படுதற் கேற்ப ஓரசை இடையே இணையும்நேரிசைவெண்பா.எ-டு : ‘ஆர்த்த அறிவினர் ஆண்டிளைஞர் ஆயினும்காத்தோம்பித் தம்மை அடக்குப – மூத்தொறும்தீத்தொழிலே கன்றித் திரிதந்(து) எருவைபோல்போத்தறார் புல்லறிவி னார்.’ (நாலடி. 351)இப்பாடல் இரண்டாம் அடிக்கண் மூன்றாம்சீர், குறள் வெண்பாவாய்‘அடக்கு’ என முடிய வேண்டுவதனை ஓரசை கூட்டி ‘அடக்குப’ என நான்காம்சீர்க்கு ஏற்ப நீட்டப்பட்டது ஓராசிடை நேரிசை வெண்பா ஆதற்கு ஏற்றது.இப்பாடல் நான்கடியிலும் ஓர் அடிஎதுகைத்தாகலின் ஒரு விகற்பம்.(யா. க. 60 உரை)