ஒருவிகற்ப ஈராசிடை நேரிசைவெண்பா

நான்கடிகளும் ஓர்எதுகையாய் இரண்டாம் அடியின் மூன்றாம் சீர்அசைச்சீராம் தன்மை நீங்கி நான்காம் சீரொடு பொருந்து தற்கு ஏற்பப்பின்னும் ஈரசை பெற்று வரும் நேரிசை வெண்பா.எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன்வஞ்சியான் என்றதனால் வாய்நேர்ந்தேன்; – வஞ்சியான்வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்;வஞ்சியாய் வஞ்சியார் கோ.’இப்பாடல் முழுதும் ஓர் அடிஎதுகை ஆதலின் ஒரு விகற்பம்;இரண்டாமடியின் மூன்றாம் சீர் ‘வாய்’ என அசைச்சீராக அமையாது நான்காம்சீரோடு இணைதற்கு ஏற்ப நேர்ந் தேன் என ஈரசை பின்னும் பெற்றமை ஈராசிடை பெற்றதாம். (யா. க. 60உரை)