ஒருமுதல் நிரல்நிறை

நிறுத்த முறையே முழுதும் சொல்லாது முதலிலுள்ள ஒன்றனையே சொல்லிநிறுத்துவது; நிரல்நிறைப் பொருள் கோள் வகையுள் ஒன்று.எ-டு : ‘மீனாடு தண்டேறு வேதியர் ஆதியாஆனாத ஐந்தொன்பான் ஆயினவும் – தேனார்விரைக்கமல வாள்முகத்தாய் வெள்ளை முதலாஉரைத்தனவும் இவ்வாறே ஒட்டு’‘வெள்ளை முதலா’ என வெண்பா ஒன்றனையே சுட்டி, ஏனையவற்றை ‘முதலா’என்பதனால் கொள்ள வைத்தமை ஒரு முதல் நிரல்நிறையாம்.மீன் – வெண்பா ; ஆடு – ஆசிரியப்பா; தண்டு (- துலாம்) – கலிப்பா;ஏறு – வஞ்சிப்பா.வெண்பாவின் இராசிகள் – கடகம், விருச்சிகம், மீனம்ஆசிரியப்பா இராசிகள் – மேடம் , சிங்கம், தனுசுகலிப்பாவின் இராசிகள் – மிதுனம், துலாம் , கும்பம்வஞ்சிப்பாவின் இராசிகள் – இடபம் , கன்னி, மகரம்(இ. வி. பாட். 122)வெண்பா முதலியவற்றிற்குரிய இராசிகள் அனைத்தையும் சொல்லாது, முறையேவெண்பா முதலிய நாற்பாவிற்கும் ஒவ்வொன்றே குறித்தமையின் ஒருமுதல்நிரல்நிறை எனினும் ஆம். (யா. வி. பக். 385)