தேவபாணியின் இருவகையுள் ஒன்று. தேவபாணி முன் னிலைக் கண்ணதேயாம்.தெய்வம் தானே மனித வடிவில் ஆவேசமுற்று “நின்னைப் புரப்பேன்“ என்றுகூறும் உலக வழக்கம் புலனெறிக்கு ஏலாது. இக்கலியின்கண் தாழிசை பெய்துபாடின் தேவபாணி ஆகாது. ‘ஆறறி அந்தணர்க்கு’ (கலி. 1) என்றகடவுள்வாழ்த்து தேவபாணி அன்றாயினமை நச்சினார்க்கினியர் உரையால்அறியப்படும்.ஒன்றாகிய போக்கினை யுடையது ‘ஒரு போகு’ எனப் பண்புத் தொகைப்புறத்துப் பிறந்த அன்மொழித்தொகையாயிற்று. நடுவே வரப்பு முதலிய தடங்கல்இல்லாத நிலத்தினை ஒருபோகு என்பது போல, நடுவே வண்ணக ஒத்தாழிசை போலத்தரவு தாழிசை பேரெண் அளவெண் கடையெண் சிற்றெண் சுரிதகம் எனப் பல உறுப்புவேறுபாடுகளால் ஓசை வேறுபாடுகள் உறாமல், பெரும்பாலும் எடுத்தல்படுத்தல் நலிதல் அற்ற ஒருவகை ஓசையொடு வருதலின் இப்பாட்டும் ஒரு போகுஎனப்பட்டது.ஒன்றாகிய போக்கினையுடையது என்றற்கு ஓருறுப்பு நீங்கி யது என்றுபொருள் செய்தலும் உண்டு. கொச்சக ஒருபோகு என்பது கொச்சகம் என்ற உறுப்புநீங்கியது; அம்போதரங்க ஒருபோகு என்பது எண் என்ற உறுப்பு நீங்கியது.அம்போத ரங்க ஒத்தாழிசைக்கு ஓதிய உறுப்புக்களுள் யாதானும் ஒன்றுஇல்லாமல் வருவது ‘ஒருபோகு’ ஆயிற்று. இழக்கப்பட்ட உறுப்பின் பெயரால்கொச்சக ஒருபோகு, அம்போதரங்க ஒருபோகு எனப் பெயர் பெறும்.(தொ. செய்.138, 139, 147 நச்.)