ஒருபொருட்பாட்டு

கவி தான் எடுத்துக்கொண்ட ஒரு செய்தியினையே வருணித்துப் பாடும்பாட்டாகிய சித்திரகவி வகை. (யா. வி. பக். 542)ஒன்றனையே துணித்துப் பாடுதல் (வீ. சோ. 181 உரை)துணித்துக் கூறலாவது வேறொன்றனொடு கலவாது தனியாகப் பிரித்துஎடுத்துக்கொண்டு கூறுதல் என்னும் கருத்துடையது.ஆகவே வருணித்துக் கூறுதலும், துணித்துப் பாடுதலும் ஆகிய இரண்டும்ஒரே பொருளன.எ-டு : ‘நெடுநல்வாடை 1-72 அடிகள்.இவ்வடிகளில் கூதிர்க்கால வருணனை வந்து இவ்வகைப் படுமாறு காண்க.