ஒருபது, இருபது….. எண்பது – என்னும் எட்டு எண்கள் நிலை மொழியாக
நிற்க, உருபு வந்து புணருமிடத்து, இடையே ஆன்சாரியை வருதலுமுண்டு;
வாராமையுமுண்டு. அது வருமிடத்து நிலைமொழியில் ‘பது’ என்பதன்கண் பகர
ஒற்று நீங்கலாகப் பிற கெடும். ஒன்பது என்ற நிலைமொழிக்கும் இது
பொருந்தும். ஒருபஃது இருபஃது…. ஒன்பஃது – என ஆய்தம் பெறினும்
இவ்விதி பொருந்தும்.
எ-டு: ஒருபது, ஒருபஃது+ ஐ
> ஒருப் + ஆன் + ஐ = ஒரு
பானை; ஒன்பது, ஒன்பஃது +ஐ
> ஒன்ப் + ஆன்+ ஐ = ஒன்பானை.
ஒருபது, ஒருபஃது + ஐ = ஒருபதை, ஒரு பஃதை; ஒன்பது, ஒன்பஃது + ஐ =
ஒன்பதை, ஒன் பஃதை எனச் சாரியை பெறாது; முடிந்தன. (நன்.249)